R Tamil
இந்த தளமானது தமிழர்களுக்குகாக தமிழில் தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்க உருவாக்கபட்டது. இந்த தளத்தில் உள்ள தகவல் அனைத்தும் பல சிறந்த தளங்களில் சேகரிக்கபட்ட தகவல்கள் ஆகும்.
Sunday, December 4, 2011
Friday, August 19, 2011
மொபைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப
சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.
மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.
இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.
Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.
Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும்இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Thursday, August 18, 2011
கூகிள் மீதான தாக்குதல் : சீனாவின் பங்கு?
சீனாவிலிருந்து கூகிள் வெளியேறலாம் என்று ஏற்கனவே ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டும் வண்ணம் உள்ளன.
ஏதோ ஹேக்கர்கள் செய்த வேலைக்கா கூகிள் வெளியேறுகிறது? என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது. இப்போது அந்த சந்தேகம் தெளிவாகி வருகிறது. சீன அரசே இது போன்ற ஹேக்கிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி செய்திகள் வர துவங்கி உள்ளன. பல நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் களவாடப்பட்டு இருக்கலாமோ? என்ற அச்சம் உலக நாடுகளிடையே பரவ தொடங்கி இருக்கிறது.
கூகுளின் சேவையான ஜிமெயில் உபயோகித்த மனித உரிமை ஆர்வலர்களின் தகவல்கள் திருடப்பட்டன என்று கூகிள் தெரிவித்து இருந்தது. இது பழைய செய்தி. இப்போது இந்த திருட்டு வேலையில் கூகிள் சீன அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் உதவி இருக்கலாம் என்று Reuters செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறி விட்டது. இந்த தாக்குதல்கள் பயனர்கள் கணினியில் மல்வேர்களை (malware) நிறுவி அதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஜனவரி 13 -க்கு பிறகு, சீன கூகிள் அலுவலர்கள் கூகிள் இன்டெர்னல் நெட்வொர்க்குகளை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல சீன கூகிள் அலுவலர்கள் விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், சிலர் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு உள்ளுக்குள் நடக்கும் அலுவலக நடவடிக்கைகள் பற்றி வெளியே கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறி உள்ளார்கள். அமெரிக்க அரசு புகுந்து சீனாவிடம் விளக்கம் கேட்கும் அளவிற்கு பிரச்சினை நடந்திருக்கிறது என்றால், என்னமோ நடந்திருக்கு! நடந்துகிட்டிருக்கு!! மர்மமா இருக்குது!!. கூகிள் இன்னும் சில தினங்களில் சீன அரசுடன் பேச போவதாக அறிவித்து உள்ளார்கள்.
இந்த கூகிள் மீதான தாக்குதலுக்கு 'ஆபரேசன் அரோரா' (Operation Aurora) என்று பெயரிட்டு உள்ளார்கள். மைக்ரோசாப்ட்டின் இணைய உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உள்ள பாதுகாப்பு ஓட்டையே இந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக Macafee இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இது தகவல்கள் திருடப்பட வாய்ப்பாக அமைந்ததாகவும் கூறி உள்ளது. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசுகள் மக்களை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திஉள்ளன.
ஜிமெயில் போலவே யாஹூ உள்பட பல நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் இந்த தாக்குதலில் பாதிக்க பட்டிருக்கலாம். கூகிள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறுகிறது. இந்த தாக்குதலின் பல விசயங்களை வெளியிடாமல் கூகிள் மௌனம் காத்து வருவது உண்மை. அவை கூகுளுக்கும், அமெரிக்க அரசுக்குமே வெளிச்சம்.
நம்மூர் செய்திக்கு வருவோம். சீனா இந்திய கணினிகளை தாக்க முயன்றதாக இந்திய பாதுகாப்பு செயலர் நாராயணன் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். தனது அலுவலகம், அரசு நிறுவன கணினிகள் டிசம்பர் 15 அன்று தாக்குதலுக்கு உள்ளானதாக கூறுகிறார். இது போன்று சைபர் தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல என்கிறார்.
PDF ஆவணம் ஒன்று டிராஜனுடன்(trojan) இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி இந்த தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாக கூறுகிறார். இது சீனாவில் இருந்ததுதான் வந்தது என்றும், துல்லியமாக எந்த இடத்தில் இருந்து வந்தது என்று கண்டறிவது கடினம் என்றும் கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு சீனா இந்திய ராணுவ கணினிகளை தாக்கி பல தகவல்களை திருடியது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கணினிகள் சீனாவிலிருந்து அதிக தாக்குதலுக்கு உள்ளாகின என்ற குற்றசாட்டும் ஏற்கனவே உண்டு. இணையத்தில் சீனர்களின் அத்துமீறல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து இருக்கின்றன.
இந்நிலையில் சீனாவில் கூகுளின் போட்டியாளரான தேடல் தளம் Baidu.cn தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டு நான்கு மணி நேரங்கள் செயலிழந்து போனது. 'இரானியன் சைபர் ஆர்மி' என்ற பெயரில் சிலர் இந்த தாக்குதலை செய்ததாக கூறி கொள்ளுகிறார்கள். இவர்கள்தான் ஒரு மாதத்திற்கு முன்பு ட்விட்டர் தளத்தையும் தாக்கியவர்கள். இது குறித்த வீடியோ செய்தி இங்கே.
அவ்வப்போது சீனா மீது சைபர் தாக்குதல் தொடர்பான புகார்கள் வந்திருந்தாலும், இந்த முறை கூகிள் எழுப்பி உள்ளதால் இது உற்று நோக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் சக்தியாகவே சீனா மாறி வருகிறது. உலக நாடுகள் இந்த விசயத்தில் ஒரு கண்டிப்பான முடிவை எடுத்து, இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் இது.
இந்த புகார்களுக்கு சீனாவிடம் கேட்டால், "ஹேக்கிங் வேலை எந்த வடிவில் இருந்தாலும், சீனாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது." என்ற பதில் வருகிறது.
நல்ல பதில்!
மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற
சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்.
இதற்கு தேவையானவை
1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி
இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.
அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.
இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.
இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.
இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Subscribe to:
Posts (Atom)