Pages

readbud

readbud - get paid to read and rate articles

Friday, August 5, 2011

ரெஜிஸ்ட்ரி மர்மங்கள்



பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பலரோ, ரெஜிஸ்ட்ரியா அதுக்குள்ள போகாதே! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா கம்ப்யூட்டர் பூட் ஆகாது, என்று பயப்படுபவர்களே அதிகம். ரெஜிஸ்ட்ரியைச் சுற்றி இது போன்ற பூச்சாண்டி கதைகள் நிறைய உண்டு. உண்மையில் ரெஜிஸ்ட்ரி என்ன கம்ப்யூட்டரில் அபாயமான ஏரியாவில் உள்ளதா? ஏன் அதை எடிட் செய்யக் கூடாது என்று சொல்கின்றனர்?

உண்மைதான். ரெஜிஸ்ட்ரியில் நேரடியாக எதேனும் மாற்றங்களைச் செய்தால் அது கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பாதிக்கும்; அல்லது மேம்படுத்தும். எனவேதான் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தும் அனைவரும் ரெஜிஸ்ட்ரி எடிட்டிங் குறித்து தெரிந்து கொள்வதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை.


ஆனால் ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்வது என்றால் என்ன? பழுதாகிவிட்ட ரெஜிஸ்ட்ரியை சரி செய்து மீட்பது எப்படி? என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. இதனால் நாம் பெரிய இழப்புகளைச் சந்திக்காமல் இருக்கலாம்; அல்லது சந்திக்கும் வேளைகளில் அவற்றை தைரியமாக எதிர்கொள்ளலாம். விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கிட ரெஜிஸ்ட்ரி தான் முதுகெலும்பாக செயல்படுவதால் ரெஜிஸ்ட்ரி மற்றும் அது செயல்படும் விதம் குறித்துப் பொதுவாக தெரிந்திருப்பது நல்லது.


ரெஜிஸ்ட்ரி என்பது என்ன?

ரெஜிஸ்ட்ரி என்பது பலவகையான தகவல்கள் அடங்கிய குறிப்பிட்ட வரிசைக் கிரமப்படி அடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இயங்க இங்கிருந்துதான் அடிப்படைக் கட்டளைகள் செல்லும். கம்ப்யூட்டர் தொடங்கிய நேரத்திலிருந்து ரெஜிஸ்ட்ரி தொடர்ந்து இயக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் இயங்குவதற்குத் தேவையான தகவல்கள் மறைத்து வைக்கப்படும் பைனரி பைல்களில் இருக்கும். இந்த பைல்களை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் ஒரு சிலர் தான் பார்க்க வேண்டியதிருக்கும். கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் என்னும் சாப்ட்வேர் மூலம் தான் பார்க்க முடியும்.


ரெஜிஸ்ட்ரியுடன் எது செய்தாலும் அது ஆபத்தா?

ரெஜிஸ்ட்ரி கம்ப்யூட்டர் இயக்கத்துடன் முழுமையாகச் சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு ஏதேனும் பிரச்சினையை நீங்கள் உருவாக்கினால் அதன் வரிகளில் மாற்றம் செய்தால் அது கம்ப்யூட்டர் இயங்குவதை முடக்கி விடும். இதனால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரெஜிஸ்ட்ரி குறித்து பெரிய அளவில் எச்சரிக்கையை வழங்கி வைத்துள்ளது. அதே போல் இன்டர்நெட்டின் பல தளங்களில் ரெஜிஸ்ட்ரி குறித்து சற்று அளவுக்கதிகமாகவே எச்சரிக்கைகள் உள்ளன. ஆனால் ஒரு நிலையில் பார்க்கையில் இவை தேவைதான் என்று தெரிகிறது. ஒரு முறை நான் ரெஜிஸ்ட்ரியை சும்மா திறந்து பார்க்கலாம் என்று பார்த்தேன். நானாக ஒரு புள்ளியை அழித்து விட்டதாக எண்ணி அதனை மீண்டும் வைத்தேன். ஆனால் அது ஒரு கமா; விளைவு என்ன தெரியுமா? கம்ப்யூட்டர் இயங்கவில்லை. நல்ல வேளையாக ரெஜிஸ்ட்ரிக்கான பேக் அப் இருந்ததால் பிழைத்தேன். அதனை மீண்டும் காப்பி செய்து கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கினேன்.


எனவே ரெஜிஸ்ட்ரியைத் தொடும் முன் அதற்கான பேக் அப் காப்பி எடுக்க வேண்டும் என்ற விதியைச் சரியாகப் பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் கவலை இல்லை; அது மட்டுமின்றி பேக் அப் காப்பியை எப்படி ரெஜிஸ்ட்ரியின் இடத்தில் பேஸ்ட் செய்வது என்பதனையும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்திருந்தால் ரெஜிஸ்ட்ரியைத் தாராளமாக நீங்கள் கையாளலாம்.


பேக் அப் செய்வது எப்படி? 
ரெஜிஸ்ட்ரி குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு என்றால் அது ரெஜிஸ்ட்ரியை பேக்கப் செய்திடும் விஷயம்தான். எப்போது நீங்கள் சிஸ்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தாலும், புதிய ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்தாலும் அல்லது இது போன்று என்ன செய்தாலும் முதலில் ரெஜிஸ்ட்ரி பைலை பேக் அப் செய்துகொள்வது நல்லது. ஏனென்றால் மேற்கண்ட செயல்களில் ஈடுபடுகையில் ரெஜிஸ்ட்ரியைப் பாதிக்கும் வகையில் அவை நடந்து கொண்டால் அது கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கிவிடும். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் என்பதைக் கட்டாயம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான காரியமில்லை.


ரெஜிஸ்ட்ரி பேக் அப் நமக்காக ரெஸ்டோர் புரோகிராமினால் செய்யப்படுகிறது. நீங்கள் எத்தனை கால இடைவெளியில் கம்ப்யூட்டரை ஆப் செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் இது நடைபெறுகிறது. ஏறத்தாழ இது 24 மணி நேர கால அவகாசத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்துடன் நீங்களாகவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்கலாம். இப்படி நாமாக மேற்கொள்வதும் நல்லது. குறிப்பாக சிஸ்டத்தில் ஏதேனும் புதிய புரோகிராம் மேற்கொள்கையிலும் அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்துகையிலும் இவ்வாறு ரெஸ்டோர் பாய்ண்ட் மேற்கொள்வது நல்லது. ஆனால் ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கி இயக்குவதில் என்ன பிரச்சினை என்றால் அது ரெஜிஸ்ட்ரியை மட்டும் அல்லது ரெஜிஸ்ட்ரியின் சில பகுதிகளை மட்டும் பேக் அப் எடுக்க வழி தராது.


பேக் அப் சாப்ட்வேர்: 
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் தொகுப்பிற்கென பேக் அப் சாப்ட்வேர் தந்துள்ளது, இது ஹார்ட் டிஸ்க் அனைத்தையும், ரெஜிஸ்ட்ரி உட்பட, பேக் அப் அல்லது இமேஜ் பைஅலாக எடுத்துத் தரும். இது தவிர பல தேர்ட் பார்ட்டி தரும் சாப்ட்வேர் பல ரெஜிஸ்ட்ரிக்கு என தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்திப் பெற்று இயக்கும் புரோகிராம்களும் இவ்வகையில் சிறப்பாக நமக்குத் துணை புரிகின்றன.

ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள்: 
இணையத்தில் பல தளங்களில் ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்திடும் பணியை மேற்கொள்ளும் புரோகிராம்கள் இருப்பதாகக் காட்டப்படுகின்றன. இந்த புரோகிராம்கள் ரெஜிஸ்ட்ரியில் தேவைப்படாமல் தங்கி இருக்கும் வரிகளை நீக்குகின்றன.


சில புரோகிராம்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக இயங்குகின்றன. ஒரு சில புரோகிராம்கள் ரெஜிஸ்ட்ரிக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளன. அடிக்கடி சிறு சிறு புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பார்ப்பவர்கள் இது போன்ற புரோகிராம்களை சரி பார்த்து அவற்றின் நம்பகத் தன்மையைப் பிறர் மூலம் அறிந்து இயக்க வேண்டும்.


சாதாரணமாக பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் இது போன்ற கிளீனர்களை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தினால் போதும். இவ்வகையில் நம்பகமான புரோகிராமாகப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் (CCleaner) என்னும் புரோகிராம் ஆகும்.


இதனை http://www.ccleaner.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு மிக மிகக் குழப்பம் இல்லாததா? எந்தப் பிரச்னையும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்யாமல் இருப்பது நல்லதுதான். ஏனென்றால் எக்குத் தப்பாக ஏதாவது ரெஜிஸ்ட்ரிக்கு தீங்கு ஏற்படும் வாய்ப்புகள் தடுக்கப்படும். கிளீன் செய்யாததால் ஒன்றும் பிரச்சினை ஏற்படாது.

கணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா?



Start Button கணினியில் ஒரே இடத்தில் இருப்பதை தான் நாம் பார்த்து இருப்போம்.அந்த Start Button வேறு இடத்திற்க்கு மாற்ற முடியுமா? வேரு இடத்திற்க்கு மாற்றினால் நன்றாக இருக்கும் அல்லவ. ஆம் இந்த மென்பொருள் Start Buttonனை வேறு இடத்திற்க்கு ஓட வைக்கிறது. ஓடிகொண்டே இருக்கும் உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து இதை நிறுத்திகொள்ளலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவி கொள்ளுங்கள். பின்பு Speed & Stepes என்று இருக்கும் பட்டனை நமக்கு தேவையான அளவு வைத்து Start என்பதை அழுத்தினால் நகர ஆரம்பிக்கும். Stop என்பதை அழுத்தினால் நகர்வது நின்று விடும்.




விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்


கம்ப்யூட்டர் வாங்கியபோது திரை எப்படி தோன்றியதோ, அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். பலருக்கு வண்ணக் கலவை பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு அதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து படிப்பதில் சிரமம் இருக்கலாம். இருந்தாலும் கம்ப்யூட்டர் இப்படித்தான் காட்சி அளிக்கும் என்று எண்ணி அப்படியே பயன்படுத்துவார்கள். அதெல்லாம் வேண்டாம். நம் விருப்பப்படி திரைத் தோற்றத்தினை அமைத்துக் கொள்ளலாம். இதனைத்தான் விண்டோஸ் டிஸ்பிளே என்று கூறுகிறார்கள். இவற்றில் பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அவை என்ன மற்றும் எதனைக் குறிக்கின்றன என்று அறிந்து கொண்டால், நம் கம்ப்யூட்டர் நம் மனதிற்கேற்றபடியான தோற்றத்தில் இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.

டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து பெறலாம். இதனையே கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அங்கு Appearance andThemes பிரிவில் display கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு செல்கையில் Display Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் செட்டிங்ஸ் அமைக்க ThemesDesktopScreen Saver
, Appearance மற்றும் Settings என்னும் ஐந்து பிரிவுகள் தரப்பட்டிருக்கும். இதில் எந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் Apply அல்லது OK என ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டிலும் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.


தீம்ஸ் (Themes) : 

தீம் என்பது ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேன்ஞ்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

டெஸ்க்டாப் (Desktop): 

ந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப்பிற்கான பேக்ரவுண்ட் எனப்படும் பின்னணியில் தெரியும் படத்தை அமைக்கலாம். அந்த விண்டோவில் கொடுத்துள்ள படங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆன்லைனில் சென்று ஏதேனும் படம் ஒன்றை எடுத்து அமைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள படங்களையும் பேக்ரவுண்ட் படமாக அமைக்கலாம். அது உங்கள் போட்டோவாகவோ அல்லது கார்ட்டூன் கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். இந்த விண்டோ மட்டுமின்றி இத்தகைய பட பைல்கள் அல்லது இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் உங்கள் மனதைக் கவரும் படங்கள் ஆகியவற்றில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும்மெனுவில் Set as Desktop Background என்பதில் கிளிக் செய்தும் பேக்ரவுண்டை அமைக்கலாம். Desktop Items என்ற விண்டோவினைப் பெற இங்கு Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இதில் General மற்றும் Web என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இதில் General பிரிவில் எந்த ஷார்ட் கட் ஐகான்கள் டெஸ்க்டாப்பில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது Desktop Cleanup என்னும் வசதியைப் பயன்படுத்தி அடிக்கடி பயன்படுத்தாத ஷார்ட்கட் ஐகான்களை எடுத்துவிடலாம். இந்த ஷார்ட் கட் ஐகான்களை எடுப்பதனால் அவை இயக்கிக் கொண்டு வரும் புரோகிராம்களுக்கு எந்த பாதிப்புவராது. புரோகிராம்களுக்கான குறுக்கு வழிகளை எடுக்கிறோம், அவ்வளவுதான்


அடுத்ததாக Screen Saver என்னும் பிரிவு: 
ந்த பிரிவில் ஸ்கிரீன் சேவராக எந்த காட்சி வர வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது நீங்களே ஒரு காட்சியை உருவாக்கி பயன்படுத்தலாம். நீங்கள் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும் குறிப்பிட்ட காலத்தில் (நிமிடங்கள்) இயக்காமல் இருந்தால் ஸ்கிரீன் சேவர் இயக்கப்பட்டு காட்சி அளிக்கும். இணையத்தில் அழகான பல ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை நம்பகமான தளங்களில் உள்ளனவா என்று பார்த்து இறக்கிப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட அழகான ஸ்கிரீன் சேவர்களுடன் வைரஸ் அல்லது உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடும் பிஷிங் புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கிவிடும். விண்டோஸ் புரோகிராமிலேயே உள்ள ஸ்கிரீன் சேவர்களைப் பயன்படுத்துவதே நல்லது. பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என முன்காட்சியாகக் காட்டப்படும். அதனைப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் அதனையே தேர்ந்தெடுத்து அமைக்கலாம். ஸ்கிரீன் சேவரே தேவையில்லை என்றாலும் அதற்கான பிரிவைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறலாம்.

இதே விண்டோவில் Power settings என்ற பிரிவில் நீங்கள் கம்ப்யூட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் மானிட்டருக்கு வரும் மின் சப்ளையை நிறுத்தவும் பின் நீங்கள் இயங்கத் தொடங்கியவுடன் இயக்கவும் செட் செய்திடலாம்.

அப்பியரன்ஸ் (Appearance): 

இந்த பிரிவுதான் உங்கள் டெஸ்க்டாப்பின் மிடுக்கான தோற்றத்தினை செட் செய்திடும் பிரிவாகும். இதில் விண்டோவின் ஸ்டைல் மற்றும் கலரை செட் செய்திடலாம். விண்டோவில் காட்டப்படும் பட்டன்கள் மற்றும் எழுத்துக்களின் அளவினை செட் செய்திடலாம். இந்த பிரிவில் கிடைக்கும் கீழாகச் செல்லும் அம்புக் குறியினை அழுத்தி பல்வேறு செட்டிங்குகளைப் பார்க்கலாம். அதில் எது உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என்பது அருகில் கட்டத்தில் காட்டப்படும். அது பிடித்துப் போனால் அதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


எழுத்தின் அளவு (Font size):
ன்பது பலருக்கும் பயன்படும் ஒரு வசதி. விண்டோவில் காட்டப்படும் எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இன்னும் சற்று பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் இதனை மாற்றி செட் செய்திடலாம். இன்னும் கூடுதலாக இரண்டு வகைகள் உண்டு. அவை: Large Fonts மற்றும் Extra Large Fonts.. இன்னும் பல மாற்றங்களை இதில் மேற்கொள்ளலாம். Advanced என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்டோ, அதன் பார்டர், ஐகான் அளவு மற்றும் மெனுக்கள் எப்படித் தோன்ற வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.


செட்டிங்ஸ் (Settings) : 
ந்த டேப் தரும் பிரிவில் ஸ்க்ரீன் ரெசல்யூசன் மற்றும் கலரின் தன்மையை செட் செய்திடலாம். ரெசல்யூசன் என்பது திரையில் எத்தனை பிக்ஸெல்களில் வண்ணம் தரப்பட வேண்டும் என்பதாகும். எந்த அளவிற்கு அதிகமாக ரெசல்யூசனில் இதனை செட் செய்கிறோமோ அந்த அளவிற்கு திரையின் தோற்றம் தெளிவாகக் கிடைக்கும். கூடுதலான ரெசல்யூசன் உங்களுக்கு அதிக அளவில் திரை இடத்தைக் கொடுக்கும். ஆனால் இதனால் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் மிகச் சிறியதாக இருக்கலாம். எனவே எழுத்துவகையினைப் பெரிதாக்கி ஐகான் களையும் பெரியதாக அமைக்கலாம். உங்களுடைய மானிட்டரில் எந்த அளவிற்கு ரெசல்யூசனை கூடுதலாக வைக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே வைக்க முடியும். பல ரெசல்யூசன்களில் வைத்து சோதனை செய்து பார்த்து எது உங்களுக்கு நிறைவாக இருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம். Color quality ஆப்ஷன் எப்போதும் Highest (32 bit) என்ற அளவில் வைக்கப்பட வேண்டும். உங்களுக்கு டிஸ்பிளே பிரச்னைகள் இருந்தால் Troubleshoot என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அங்கு தீர்வுகள் கிடைக்கும். இதே விண்டோவில் இருக்கும் அஞீதிச்ணஞிஞுஞீ பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது General, Adapter, Monitor, Troubleshoot, Color Management என்ற டேப்களுடன் விண்டோ ஒன்று காட்டப்படும்.General: கூடுதலான ரெசல்யூசனில் திரைக் காட்சி அளவை செட் செய்திருந்தால் இங்கு உள்ள DPI (dots per inch) செட்டிங்ஸ் மூலம் டெக்ஸ்ட் உட்பட அனைத்து ஸ்கிரீன் சமாச்சாரங்களையும் பெரிதாகக் காட்டலாம்.


Adapter: 
ந்த பிரிவு உங்களுடைய கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் கார்டு குறித்த தகவல்களைக் கொடுக்கும். இதில் உள்ள Properties என்ற பிரிவில் கிளிக் செய்தால் அப்போது பயன்பட்டுக் கொண்டிருக்கும் டிரைவர் சாப்ட்வேர்கள் அனைத்தும் குறித்த தகவல்கள் கிடைக்கும்.

Monitor

மானிட்டர் திரை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ரெப்ரெஷ் ரேட்டை இங்கு அதிகப்படுத்தலாம். குறைவான ரெப்ரெஷ் ரேட் இருந்தால் அதனால் கண்களுக்குக் கெடுதல் வருமாதலால் இந்த புதுப்பிக்கும் ரேட்டினை அதிகமாக வைத்தல் நல்லதுதான். இந்த திரையில் Hide modes that this monitor cannot display என்று இருப்பதனை டிக் செய்திட வேண்டும். அதன் பின் ஆரோ அழுத்தி மெனுவினை விரித்து அதிக பட்ச ரெப்ரெஷ் ரேட்டினை அமைக்கவும். எல்.சி.டி. திரைகளுக்கு இந்த பிரச்னை இல்லை.


Troubleshoot: 
தில் உள்ள Hardware acceleration slider ஐப் பயன்படுத்தி கிராபிக்ஸ் கார்ட் செயல்பாட்டை மாற்றலாம்.

Color Management: 

டிசைனர்கள் மற்றும் போட்டோ கிராபர்கள் பலவகையான கலர் திட்டங்களை அமைக்க இந்த பிரிவு உதவுகிறது. கடைசியாக உள்ள டேப் உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்டிற்கான செட்டிங்ஸ் அமைப்புகளை அமைக்க உதவுகிறது. இதனை ட்யூன் செய்வதற்கான வழிகளை அந்த கிராபிக்ஸ் கார்ட் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பெற வேண்டும். அவ்வப்போது அந்நிறுவனம் இந்த கார்டுக்கென வழங்கும் மேம்படுத்தப்பட்ட டிரைவர் புரோகிராம்களை டவுண்லோட் செய்து சிஸ்டம் பைல்களுடன் சேர்க்க வேண்டும்.

இன்டர்நெட் வரலாறு


1. World Wide Web என்ற சொல் தொடரை உருவாக்கியவர் யார்?
          டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப்
பயன்படுத்தினார்.


2. இன்டர்நெட் எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது?
           1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்  கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPAஎன்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.


3. லிக்லைடர் (J.C.R. Licklider) என்பவர் இன்டர்நெட் டுடன் எந்த வகையில் தொடர்பு கொண்டிருந்தார்?
          இன்டர்நெட் தொடங்குவதற்கான கருத்துரு வாக்கத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர். இதனாலேயே இவர் இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கம்ப்யூட்டரும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல்முறையைக் கொண்டு வந்தவர் இவர். அவர் அத்தகைய இணைப்பை காலக்டிக் நெட்வொர்க் ("Galactic Network") என அழைத்தார். அவருடைய திட்டம் 1962ல் DARPA, (Defense Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET
 இணைய, இன்டர்நெட் உருவானது.


4. ARPANET என்பது என்ன?
           ஆர்பா நெட் என்பது ‘Advanced Research Projects Agency Network’ ஐக் குறிக்கும். இராணுவ ரகசிய தகவல் தொடர்புகளுக்கான நெட்வொர்க்காக இது அமைக்கப்பட்டது.


5. முதன்முதல் வெகு தொலைவில் அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு எங்கு நிகழ்ந்தது?
            1965 ஆம் ஆண்டு, மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி, எம்.ஐ.டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ராபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தாமஸ் மெரில் (Thomas Merrill) என்பவருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய TX2 கம்ப்யூட்டரை கலிபோர்னி யாவில் இயங்கிய கி32 என்ற கம்ப்யூட்டருடன் இணைத்தார். அப்போது தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. லியோனார்ட் கிளெய்ன் ராக் (Leonard Kleinrock) என்பவர் யார்?
        இன்டர்நெட் தொடர்பில் தகவல்களை அனுப்ப பாக்கெட் ஸ்விட்சிங் (Packet Switching) என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. பைல்களில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப்படுகின்றன. லியோனார்ட் கிளெயின்ராக் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி.


7. ஈதர் நெட் (Ethernet) என்பது என்ன?
          லோக்கல் நெட்வொர்க்குகளில் தகவல் பரிமாறப்படும் வழிகளில் இதுவும் ஒன்று. இதற்கான மூலம் "Packet Networks" என்ற பெயரில் Bob Metcalfe என்பவர் மேற் கொண்ட மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து வந்தது. இன்னொரு செய்தியும் இதில் உண்டு. ஈதர்நெட் என்பதற்கான காப்புரிமை செராக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது.


8. மவுஸ் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
          கம்ப்யூட்டருக்கான முதல் மவுஸ் 1968ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில் Douglas Engelbart என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.


9. இன்டர்நெட் எப்போது மிகவும் பிரபலமானது?
          இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.


10. எவ்வளவு வேகமாக இன்டர்நெட் பயன்பாடு பரவியது?
             சூறாவளி வேகத்தில் என்று சொல்லலாம். 5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.


11. மிக அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் உள்ள நாடு எது?
             
அமெரிக்கா என்று தானே எண்ணுகிறீர்கள். தவறு. ஸ்வீடன். இங்குள்ள மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்டர் நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

12. ISP என்பது என்ன?
             ISP(Internet Service Provider) என்பது நமக்கு, நம்மிடம் கட்டணம் பெற்றுக் கொண்டோ, பெறாமலோ, இன்டர்நெட் இணைப்பு வசதியை வழங்குபவர்.