Pages

readbud

readbud - get paid to read and rate articles

Monday, August 8, 2011

ஃபேஸ்புக் ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகள்



ஃபேஸ்புக் இணைய தளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாகவும் ப்ரைவசி தொடர்பாகமும் அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு. ஃபேஸ்புக் இணைய தளத்தில் ப்ரைவசி கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாங்கள் செயற்படுத்தினால் மாத்திரமே எங்களால் அவற்றை அனுபவிக்க முடியும்.
ஃபேஸ்புக் இணைய தளமானது சாதாரணமாக எமது அனைத்து விடயங்களையும் உலகமே பார்க்கும் வண்ணம் திறந்துவைக்கிறது. அவற்றினை நாங்கள் எங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கும் போது எமது ஃபேஸ்புக் பாவனையை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.
fb privacy main page
ஃபேஸ்புக் இணைய தளத்தில் காணப்படும் அடிப்படையான சில ப்ரைவசி முறைமைகளினை எவ்வாறு பாவிப்பது என்பதை இன்று பார்ப்போம். முதலாவதாக ஃபேஸ்புக் இணைய தளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Account என்பதினை க்ளிக் செய்துPrivacy Setting என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். அங்கு காணப்படும் முக்கியமான நான்கு விடயங்கள் தொடர்பான விளக்கத்தினை இப்போது பார்ப்போம்.
Sharing on Facebook
இந்தப் பகுதி எமது  அடிப்படை தகவல்களினை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. எமது பெயர் , நண்பர்களின் விபரம், கல்வி நிலையம், வேலை பார்க்கும் இடம் , நீங்கள் விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்கள் போன்ற அடிப்படை விடயங்களினை எமது நண்பர் அல்லாதவர்கள் எவ்வாறு பார்க்கலாம் , பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இந்த பகுதி உதவும்.
Connecting on Facebook
இந்தப் பகுதியானது நீங்கள் ஃபேஸ்புக் இணைய தளத்தில் பகிரும் விடயங்களினை யார் யார் பார்க்கலாம் என்பதினை வரையறுக்க இது பயன்படும். உதாரணமாக உங்கள் ஸ்டேடஸ் , போட்டோக்கள் , கொமன்ஸ்கள் என்பவற்றை குறிப்பிடலாம்.
Apps and Websites
இந்தப் பகுதியானது ஃபேஸ்புக்கில் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவிசெய்கின்றது. Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக் கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள் என்பதினை பார்க்கலாம்.
Block Lists
இந்தப் பகுதியானது உங்களை தொல்லை செய்யும் ஃபேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்துகொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும் நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் ஃபேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது போன்ற பல விடயங்களினை எதிர்காலத்தில் தர நான் எதிர்பார்க்கிறேன்.

Google+ ஓர் அறிமுகம்.




இப்போதைக்கு இணையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் கூகிள்+ இனை பற்றிய ஒரு அறிமுகமே இது. கூகிள் நிறுவனத்திற்கு பெரும் தலையிடியாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த கூகிள்+ திட்டம். சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு புத்தம் புதிய சோஷியல் நெட்வர்க்.

+Circles,+Hangouts, +sparks, +Mobile, +Huddle என்று பல பரீட்சயமான , சில புதிய விடயங்களினையும் உள்ளடக்கி இந்த கூகிள்+ வெளியாகியுள்ளது. கூகிள்+ ஆனது தற்போது ஒரு குறிப்பிட்ட தொகையினரினை மட்டுமே இணைத்து பரீட்சித்துவருகின்றது.
Circles என்பது கூகிள்+ இல் இருக்கும் பாவனையாளர்களினை எமக்கு விரும்பியவாறு குழுக்களாக்குவது. இவ்வாறு குழுக்களாக்குவதன் மூலம் எமது வலையமைப்பினை பராமரிப்பது மிக இலகுவாகின்றது. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வட்டத்தினர்க்கு மட்டும் குறிப்பிட்ட ஸ்டேடஸினை பரிமாற முடியும்.

Hangouts என்பது வீடியோ chatting வசதியினைக்குறிக்கும். குறிப்பிட்ட ஒரு குழுவுடன் வீடியோ சட்டிங் செய்யும் வசதியாகும்.

Sparks என்பது எமது விருப்பங்களை பட்டியல்படுத்திவைக்கும் இடமாகும். இவ்வாறு சேர்த்துவைப்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட விடயம் தொடர்பாக இணையத்தில் நடக்கும் அனைத்துவிடயத்தினை இலகுவாக பார்வையிடலாம்.
Huddle என்பது மொபைல் மூலமான ஒரு group messaging அப்ளிகேசனாகும்.
கூகிள்+ வெளியாகி ஒரு வாரம் கழியாத நிலையில் கூகிள்+ பல தரப்பினரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பல ஆங்கில தொழிநுட்ப வலைப்பதிவுகள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல கருத்தினையே சம்பாதிதிருக்கிறது.

ஷார்ட்கட்கீகள்



டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்

ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷார்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷார்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To)  என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷார்ட் கட் அமைக்கப்படும்.


கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்

அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெ ண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?

* கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.

* Tools  கிளிக் செய்து Options  தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print  என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Printing options" என்ற பகுதியில் உள்ள "Reverse print order" என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

விண்டோஸ் 7 ஷார்ட்கட்கீகள்

சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகளின் ஒரு தொகுப்பு முன்பு தரப்பட்டது. இதோ இரண்டாவது தொகுப்பினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.

Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.

Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.

Win + L  உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.

Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.

Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.

Win + P  பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.

Win + R  ரன் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

Win + U அக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.

Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.

உங்கள் மூளையின் வயது என்ன?



உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே, உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.

அப்படியானால் இதனை எப்படிக் கண்டு பிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இதன் முகவரி http://www. freebrainagegames.com/. இந்த தளம் சென்று, இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.

இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி (விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும், போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன; அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

அடுத்த பிரிவு அடென்ஷன் (Recognition): 
இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.

அடுத்த பிரிவு மொழி (Anagrams) : 
எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.

எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான் காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.

அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.

இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப் படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.

ஒருமுறை விளையாடிப் பார்த்தால், நிச்சயம் மூளைத்திறன் உயரும் என்று எண்ணுகிறேன்.