Pages

readbud

readbud - get paid to read and rate articles

Friday, August 12, 2011

கணினி டிப்ஸ் சில



டவுண்லோட் செய்த பைல் எங்கே?

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள். நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.


குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க


வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fonts தேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.



டாஸ்க் பார் / டூல் பார்

பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.



உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த

கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது. இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.


ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?

வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.

விண்டோஸ் 7 தீர்வுகள்



விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.
பிரச்னைகளைப் பதிவு செய்: 
(PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான்Problems Step Recorder என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து, PSR என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம்.

2.'சிடி'யில் இமேஜ்: 



மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.

3. பிரச்னைகளைத் தீர்க்க: 

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’) எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.

4. 
ஆபத்துக்கால 'சிடி':  
நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: 


 நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா? அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா? இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க, AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC என்ற புரோகிராமினை இயக்கி, Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள்.

6. கூடுதலாக கணக்கிடும் வசதி: 

விண்டோஸ் 7 தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன் Mode என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.

7. 
மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: 
 முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர்Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் Scan for affected programs’ என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.

8.எக்ஸ்பி வகை இயக்கம்: 


 பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து(http://www.microsoft.com/windows/virtualpc/download.aspx)எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.

9.சகலமும் ரைட் கிளிக்: 

ந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால்,Documents, Pictures, the Windows folder போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா! அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம். பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

10. 
மாறும் வால் பேப்பர்:
 விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ஷாவாக ( Slide Show)அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Backgroundஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். மேலே குறிப்பிட்டவை போல விண்டோஸ் 7 சின்னஞ்சிறு வசதிகள் இன்னும் பலவற்றைக் கொண்டுள்ளது. இவற்றை வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா ?



1. இணைய இணைப்பின் வேகம் 8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.

2.Start Me Up என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.

3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.

4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

5. உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.

6. லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.

7. கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டதுThe Sims என்ற கேம்.

8. உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.

9.ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும் கணக்கிட்டுப் பார்க்கவும்.

10. Hotswapping என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.

11. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.

12. ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும். முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம். இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்து வைக்கலாம்.

13. FAT16, FAT32, மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும்.

14. விண்டோஸ் என்.டி. (Windows NT) யில் உள்ள என். டி. என்பதுNew Technology என்ற சொற்களைக் குறிக்கிறது.

15. 1977 ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

16. விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க




பிரபல தளங்களின் உதவியுடன் நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்கிறோம்.
இந்த சேவையை பல தளங்கள் வழங்கினாலும் ஜிமெயில், பேஸ்புக் மற்றும் யாகூ இவை மூன்றும் தான் மிகப்பிரபலமான தளங்கள்.


இந்த தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்தாலும் இந்த மூன்று தளத்திலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய முடியவில்லை என்பது வருத்தமே.


ஏனென்றால் ஒவ்வொரு தளத்திற்கும் நன் நண்பர்களின் வட்டம் மாறும் ஜிமெயிலில் யாருடனாவது பேசி கொண்டிருந்தால் பேஸ்புக் நண்பர்களிடம் Chatting செய்ய முடியாது.


பேஸ்புக்கில் Chatting செய்து கொண்டிருந்தால் ஜிமெயில், யாஹூ நண்பர்களிடம் அரட்டை அடிக்க முடியாது. இந்த பிரச்சினை இனி இல்லை ஜிமெயில், பேஸ்புக், யாஹூ என மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் Chatting செய்து கொள்ளலாம்.


இந்த தளத்திற்கு சென்று புதியதாக உறுப்பினர் ஆகி கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை ஏற்கனவே நமக்கு உள்ள பேஸ்புக் ஐடி மூலம் உறுப்பினர் ஆகி கொள்ளும் வசதி உள்ளது.


ஏதாவது ஒரு முறையில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய உடன் உங்கள் விண்டோவில் வலது பக்கத்தின் கீழே ஒரு மெனுபார் போன்று இருக்கும்.


Chat with என்ற பகுதியில் Gmail, Yahoo, Facebook மற்றும் ibibo போன்ற ஐகான்கள் இருக்கும். அதில் அதில் ஒவ்வொன்றிலும் கிளிக் செய்து உங்கள் கணக்குகளில் நுழைந்தால் ஓன்லைனில் உள்ள நண்பர்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும்.


அந்த நண்பர்களுக்கு நேராக அவர்கள் எந்த தளத்தில் ஓன்லைனில் உள்ளார்கள் என கண்டறிய ஏதுவாக அவர்களின் பெயருக்கு நேரே அதற்க்கான லோகோக்களும் காண்பிக்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான நண்பரின் மீது கிளிக் செய்தால் Chat window திறக்கும். அதில் அவருடன் நீங்கள் அரட்டை அடித்து கொள்ளலாம்.


மேலும் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கவும் இதில் வசதியை கொடுத்து இருக்கின்றனர். இதில் உள்ள Go offline என்பதை கிளிக் செய்தால் நீங்கள் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம்.


அவ்வளவு தான் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து நண்பர்களுடனும் பேசி மகிழலாம்.


இணையதள முகவரி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய Open Compute Project



ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று புதிய அறிவித்தல் ஒன்றினை தனது தலைமையகத்திலிருந்து நேற்று வெளியிட்டிருந்தது. வழமையான வெளியீடுகளை போல் அல்லாது இது ஒரு வித்தியாசமான திட்டமாக அமைந்திருந்தது.  ”Open Compute Project” என்பதே இந்த புதிய திட்டத்தின் பெயர்.



Open Compute Project என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் Hardware கட்டமைப்புடன் தொடர்புடைய ஒரு திட்டம். ஃபேஸ்புக் நிறுவனம் தனது Data Center இன் தொழிநுட்பங்களை உலகளவில் பகிர்ந்து கொள்ளப்போகிறது.அதாவது Open Source ஆக்கியிருக்கிறது.


நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு ஆரம்பக்கட்டத்தில் உள்ள நிறுவனம் எவ்வாறு ஒரு Data center இனை தோற்றுவிக்கிறது. அதற்கு எவ்வாறான செலவுகள் ஏற்படுகிறது அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஃபேஸ்புக் எவ்வாறான முறையினை கையாண்டது என பல விளக்கங்கள் தரப்பட்டன.


மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் தனது வினைத்திறனான Data Center இன் மூலம் எவ்வளவு மின்சக்தியினை சேகரிக்கின்றது , எவ்வளவு பணத்தினை மீதப்படுத்திகிறது மேலும் எவ்வளவு வெப்பத்தினை குறைக்கிறது என்பது தொடர்பான தரவுகளினை ஃபேஸ்புக் வெளியிட்டிருந்தது.


ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தொழிநுட்பத்தினை ஏனையோரும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த துறையில் இருக்கும் அனைத்து மட்டத்தினருக்கும் இந்த Open Compute Project மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.