கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.
ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.
Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.
Undo Send:
இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.
Snake:
கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.
Attachment Detector:
அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.
Hide Unread Counts:
நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.
Vacation Time :
வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.
You Tube Preview:
உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.
Insert Image:
இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.
கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.
அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது.
மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.
பயர்பாக்ஸ் பேட்ச் பைல்
அண்மையில் பயர்பாக்ஸ் 3.5.6 பிரவுசரில் உள்ள பல பிரச்னை களைத் தீர்க்கும் அப்டேட் பேட்ச் பைல் ஒன்றை, மொஸில்லா வெளியிட்டுள்ளது. இவற்றில் சில மிக ஆபத்தான வையாக இருந்தன. 62 இடங்களில் பிழை கண்டறியப்பட்டு, இந்த பேட்ச் பைல் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் கிடைத்துள்ள வெளியீட்டுக் குறிப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் மிக மிக முக்கியமான மூன்று பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மெமரியில் பிரச்னைகளை ஏற்படுத்தியது எனவும், அது சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை தவிர 62 இடங்களில் இருந்த சில குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த பேட்ச் பைலை கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். http://enus.www.mozilla.com/enUS/products/download.html?product=firefox3.5.6&os=win&lang=enUS இதனால் நமோரகா (Namoroka) என்ற பெயரில் வெளியிடப்படப் போவதாக இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.6 இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன,அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம்.
2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறதுwww.alfy.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.
3. www.surfnetkids.com என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறதுwww.kidsites.org என்ற முகவரியில் உள்ள தளம்.
5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறதுwww.coolmath4kids.com உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்-தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான பிறவற்-றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணை-யத்தில் உள்ளன. இவை அனைத்-தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.
அவற்றின் முகவரிகள்: www.coolmath.com,www.coolmath4kids.com,www.sciencemonster.com,www.spikesgamezone.com
6. www.kids.yahoo.com என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்-கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தை-களுக்-காகவே உருவாக்கப்-பட்டுள்ளது.
7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற www.hitentertainment.com என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்-கின்றன.
8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்-களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக www.nickjr.com ,www.uptoten.com, www.kidsgames.org,www.gameskidsplay.net ஆகியவை உள்ளன.
9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூல-மாகத் தரும் ஓர் இணைய தளம் www.playkidsgames.com இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்-களையும் தருகிறது இந்த தளம்.
10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம்www.funbrain.com என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று தொடரும் வகையில் கேம்-ஸ்-கள் அமைக்-கப்பட்-டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்-கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்-படியாகக் கற்றுக் கொடுக்-கிறது. குழந்தைக-ளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்-கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்-டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்-கப்பட்டுத் தரப்படுகின்றன.
11. என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்தைகளுக்கான தளம் எது-வும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கலாம். இவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் உள்ளதுwww.everythinggirl.com என்ற தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதார-ணமாகப் பயன்படுத்தினாலே அவர்களின் சிந்திக்கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும்.
இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்தெடுத்-துத்தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம்.

நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா? அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா? வீட்டிற்கு வந்த பின்னும், ஆசிரியர் ஒருவரின் வகுப்பறைப் பாடம் போல கேட்டு உங்கள் பாட அறிவை வளர்த்துக் கொள்ள ஆசையா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் Academic Earth.
இந்த தளத்தில் பல பிரபலமான வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் ஆன் லைன் பாடத்திட்டங்களுக்கான வகுப்பறை ஆசிரியர் விளக்க உரைகள் தரப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களுக்கு மான வீடியோ உரைகள் உள்ளன. அப்படியே வகுப்பில் தரப்படும் காட்சியையும், வீடியோ பாடங்களையும் கண்டு, குறிப்பெடுக்கலாம். பாடங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பின் அந்த பாடப் பிரிவின் கீழ் உள்ள துணைப் பாடப் பிரிவுகள் தரப்படுகின்றன. இங்கும் நமக்கு தேவைப்படும் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள அனைத்து வீடியோக்களும், பாடக் குறிப்புடன் காட்டப்படுகின்றன. இந்த பல்கலைக் கழகங்கள் இவ்வாறு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது நமக்கும் பயனளிக்கிறது. இதன் பாடப்பிரிவுகள் எதனையும் விட்டு வைக்கவில்லை.
அவை: Architecture, Astronomy, Biology, Chemistry, Computer Science, Economics, Engineering,Environmental Studies, History, International Relations, Law, Literature, Mathematics, MediaStudies, Medicine, Philosophy, Physics, Psychology, ,மற்றும் Religious Studies!
இந்த வகுப்பறைகளில் உள்ள வெளிச்சத்தைக் குறைத்து வைத்து, ஆசிரியரின் கருத்துரை மீது நம் முழுக்கவனத்தையும் செலுத்தி கேட்கவும் வசதி தரப்பட்டுள்ளது.
ஆசிரியரின் விரிவுரையைக் கேட்டபின் அவருக்கு மார்க் போடும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. வீடியோ காட்சியின் மேலாகத் தரப்பட்டுள்ளA முதல் F வரையிலான ஸ்கேலைப் பயன்படுத்தி, இதற்கான மதிப்பெண்ணை வழங்கலாம்.
கற்றுக் கொள்ளவும், தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான தளம். ஒருமுறை சென்ற பின் தினந்தோறும் பல மணி நேரம் இதில் செலவிடுவீர்கள் என்பதுவும் உறுதி.
இந்த தளம் http://www.academicearth.org/ என்ற முகவரியில் இயங்குகிறது.

சில விஷயங்கள் ஆஹா! அப்படியா என்று வியக்கத் தோன்றும். ஏனென்றால் நாம் தொடர்ந்து தினந்தோறும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் அவற்றில் இந்த விஷயங்கள் இருக்கின்றன என்று தெரியாது. யாராவது அதனைச் சுட்டிக் காட்டுகையில் வியந்து போகிறோம். அப்படிப்பட்ட சில தகவல்களை இங்கு காணலாம்.
1. சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.
2. எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.
3. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன் எத்தனை இமெயில்களை ஒரு ஜனாதி பதியாக அனுப்பி இருப்பார். ஆயிரம்? லட்சம்? இல்லவே இல்லை. ஜஸ்ட் இரண்டு தான். ஒன்று ஜான் கிளென் என்பவருக்கு – அவர் ஸ்பேஸ் ஷட்டில் விமானத்தில் இருக்கையில். இன்னொன்று தனக்கான இமெயில் சரியாகச் செயல்படுகிறதா என்று பார்க்க ஒரு டெஸ்ட் இமெயில்.
4.ரேடியோ அலைகள் ஒலி அலைகளைக் காட்டிலும் மிக மிக வேகமாக பயணிக் கின்றன. ஒரு அறையில் பேசப்படும் ஒலி அந்த அறையின் பின் சுவர்களை அடையும் முன் அந்த ஒலியை ரேடியோ மூலம் ஒலி பரப்பினால் அந்த நேரத்தில் 18 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கும்.
5. டைப்ரைட்டர் கீ போர்டை குவெர்ட்டி (QWERTY) கீ போர்டு என அழைக்கிறோம். இது கீகளின் வரிசையில் எழுத்துக்களுக்கான வற்றில் முதல் வரிசையில் முதல் ஆறு கீகளை இணைத்த சொல்லாகும். இன்னொரு விஷ யம் என்னவென்றால் Typewriter என்ற சொல்லை முதல் வரிசையில் உள்ள கீகளைக் கொண்டே அமைக்கலாம் என்பதே.
6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் தொகுப்பில் சேவ் என்ற செயல்பாட் டிற்கான ஐகான் இன்னும் பிளாப்பி டிஸ்க்காகவே உள்ளது. அதிலும் அதன் ஷட்டர் பின்புறமாக இழுக்கப்பட்ட நிலையில் உள்ளது.
7. இன்று இணையத்திற்கான ஏகப்பட்ட சர்ச் இஞ்சின்கள் உள்ளன. முதல் முதலில் உருவாக்கப்பட்ட சர்ச் இஞ்சின் குறித்துப் பார்ப்-போமா! Archie என்ற பெயரில் முதல் சர்ச் இஞ்சின் உருவானது. இதனை Alan Emtage என்பவர் தயாரித்தார். இவர் McGill என்ற பல்கலைக் கழகத்தில் அப்போது மாணவராக இருந்தார். இது 1990ல் உருவானது.
8. உலகின் சிறிய ஹார்ட் டிஸ்க்கை உருவாக்கிய பெருமை தோஷிபா நிறுவனத்தைச் சேரும். 0.85 அங்குல அளவில் இந்த ஹார்ட் டிஸ்க் தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவிலான டிஸ்க்கில் பல கிகாபைட் அளவிலான தகவல்களைக் கொண்டிருந்ததும் இந்த டிஸ்க்கே.
9. இன்டர்நெட்டில் உலா வருபவர்கள் விக்கி பீடியாவை (Wikipedia) பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். அனைத்திற்கும் அதன் ஆதி அந்தம் முதல் தகவல்களைத் தரும் இணைய களஞ்சியமாகும்.
நீங்களும் உங்களிடம் உள்ள தகவல்களை இதில் இடலாம் என்பது இதன் சிறப்பு. இந்த Wikipedia என்ற சொல் ஏன் இதற்கு வைக்கப்பட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா! ஹவாய் மொழியில் "Wiki" என்றால் விரைவில் என்று பொருள். அதோடு என்சைக்ளோபீடியாவின் பின் பகுதி சேர்க்கப்பட்டு இந்த சொல் உருவாக்கப்பட்டதாம்.
10. பல வீடுகளில் மைக்ரோ ஓவன் அடுப்பு உள்ளது. இது பயன்படுத்தும் மின்சாரம் 600 வாட் முதல் 1100 வாட் வரை ஆகும். சரி, உங்கள் மொபைல் போன் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஜஸ்ட் 0.6 வாட் தான்.
11. இமெயிலில் @ என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது. இது ச்t என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ஆகும். இந்த இடத்தில் என்பதனை இது பொருளாகக் கொண்-டுள்ளது. இந்த முகவரியில் உள்ள சர்வரில் இவருக்கு இன் பாக்ஸ் உள்ளது என்பதே ஒரு இமெயில் முகவரியாகும். பல வீடுகளில் மைக்ரோ ஓவன் அடுப்பு உள்ளது. இது பயன்படுத்தும் மின்சாரம் 600 வாட் முதல் 1100 வாட் வரை ஆகும். சரி, உங்கள் மொபைல் போன் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஜஸ்ட் 0.6 வாட் தான்.