Pages

readbud

readbud - get paid to read and rate articles

Friday, August 19, 2011

மொபைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப



சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.

மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.

இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.

Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.


இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.

Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும்இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Thursday, August 18, 2011

கூகிள் மீதான தாக்குதல் : சீனாவின் பங்கு?



சீனாவிலிருந்து கூகிள் வெளியேறலாம் என்று ஏற்கனவே ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டும் வண்ணம் உள்ளன.

ஏதோ ஹேக்கர்கள் செய்த வேலைக்கா கூகிள் வெளியேறுகிறது? என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது. இப்போது அந்த சந்தேகம் தெளிவாகி வருகிறது.  சீன அரசே இது போன்ற ஹேக்கிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி செய்திகள் வர துவங்கி உள்ளன. பல நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் களவாடப்பட்டு இருக்கலாமோ? என்ற அச்சம் உலக நாடுகளிடையே பரவ தொடங்கி இருக்கிறது.

கூகுளின் சேவையான ஜிமெயில் உபயோகித்த மனித உரிமை ஆர்வலர்களின் தகவல்கள் திருடப்பட்டன என்று கூகிள் தெரிவித்து இருந்தது. இது பழைய செய்தி. இப்போது இந்த திருட்டு வேலையில் கூகிள் சீன அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் உதவி இருக்கலாம் என்று Reuters செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறி விட்டது.  இந்த தாக்குதல்கள் பயனர்கள் கணினியில் மல்வேர்களை (malware) நிறுவி அதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஜனவரி 13 -க்கு பிறகு, சீன கூகிள் அலுவலர்கள் கூகிள் இன்டெர்னல் நெட்வொர்க்குகளை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல சீன கூகிள் அலுவலர்கள் விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், சிலர் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு உள்ளுக்குள் நடக்கும் அலுவலக நடவடிக்கைகள் பற்றி வெளியே கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறி உள்ளார்கள். அமெரிக்க அரசு புகுந்து சீனாவிடம் விளக்கம் கேட்கும் அளவிற்கு பிரச்சினை நடந்திருக்கிறது என்றால்,  என்னமோ நடந்திருக்கு! நடந்துகிட்டிருக்கு!! மர்மமா இருக்குது!!. கூகிள் இன்னும் சில தினங்களில் சீன அரசுடன் பேச போவதாக அறிவித்து உள்ளார்கள்.

இந்த கூகிள் மீதான தாக்குதலுக்கு 'ஆபரேசன் அரோரா' (Operation Aurora) என்று பெயரிட்டு உள்ளார்கள். மைக்ரோசாப்ட்டின் இணைய உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உள்ள பாதுகாப்பு ஓட்டையே இந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக Macafee இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இது தகவல்கள் திருடப்பட வாய்ப்பாக அமைந்ததாகவும் கூறி உள்ளது. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசுகள் மக்களை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திஉள்ளன.

ஜிமெயில் போலவே யாஹூ உள்பட பல நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் இந்த தாக்குதலில் பாதிக்க பட்டிருக்கலாம். கூகிள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறுகிறது. இந்த தாக்குதலின் பல விசயங்களை வெளியிடாமல் கூகிள் மௌனம் காத்து வருவது உண்மை. அவை கூகுளுக்கும், அமெரிக்க அரசுக்குமே வெளிச்சம்.

நம்மூர் செய்திக்கு வருவோம். சீனா இந்திய கணினிகளை தாக்க முயன்றதாக இந்திய பாதுகாப்பு செயலர் நாராயணன் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். தனது அலுவலகம், அரசு நிறுவன கணினிகள் டிசம்பர் 15 அன்று தாக்குதலுக்கு உள்ளானதாக கூறுகிறார். இது போன்று சைபர் தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல என்கிறார்.

PDF ஆவணம் ஒன்று டிராஜனுடன்(trojan) இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி இந்த தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாக கூறுகிறார். இது சீனாவில் இருந்ததுதான் வந்தது என்றும், துல்லியமாக எந்த இடத்தில் இருந்து வந்தது என்று கண்டறிவது கடினம் என்றும் கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு சீனா இந்திய ராணுவ கணினிகளை தாக்கி பல தகவல்களை திருடியது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கணினிகள் சீனாவிலிருந்து அதிக தாக்குதலுக்கு உள்ளாகின என்ற குற்றசாட்டும் ஏற்கனவே உண்டு. இணையத்தில் சீனர்களின் அத்துமீறல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து இருக்கின்றன.

இந்நிலையில் சீனாவில் கூகுளின் போட்டியாளரான தேடல் தளம் Baidu.cn தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டு நான்கு மணி நேரங்கள் செயலிழந்து போனது. 'இரானியன் சைபர் ஆர்மி' என்ற பெயரில் சிலர் இந்த தாக்குதலை செய்ததாக கூறி கொள்ளுகிறார்கள். இவர்கள்தான் ஒரு மாதத்திற்கு முன்பு ட்விட்டர் தளத்தையும் தாக்கியவர்கள். இது குறித்த வீடியோ செய்தி இங்கே.

அவ்வப்போது சீனா மீது சைபர் தாக்குதல் தொடர்பான புகார்கள் வந்திருந்தாலும், இந்த முறை கூகிள் எழுப்பி உள்ளதால் இது உற்று நோக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் சக்தியாகவே சீனா மாறி வருகிறது. உலக நாடுகள் இந்த விசயத்தில் ஒரு கண்டிப்பான முடிவை எடுத்து, இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் இது.

இந்த புகார்களுக்கு சீனாவிடம் கேட்டால், "ஹேக்கிங் வேலை எந்த வடிவில் இருந்தாலும், சீனாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது." என்ற பதில் வருகிறது.

நல்ல பதில்!

மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற





மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். படித்திருப்பீர்கள். தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன.

சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்.

இதற்கு தேவையானவை

1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி

இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.


அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.

இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை  பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.

இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.

இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

Wednesday, August 17, 2011

முடியல... இதுக்கு மேல தாங்காது - சீனாவில் கூகுள்



சீன அரசு எப்போதும் ஊடகங்களை கடமையான சட்ட திட்டங்கள் மூலம் கட்டுபடுத்தி வைத்து இருக்கிறது என்பதும், அங்கு பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது என்பதும் பரவலாக உள்ள குற்றசாட்டு. ஊடகங்களை கட்டுப்படுத்தி வைத்து இருந்தாலும் இணையத்தில் தனது அரசை எதிர்த்து எழுதுபவர்களை கட்டுப்படுத்த சீன அரசு போராடித்தான் வருகிறது.

அடிக்கடி இணையதளங்களை தனது நாட்டில் தடை செய்வதும் பின்பு அனுமதிப்பதும் சீனாவில் வழமைதான். உலக பிரபல தளங்கள் பேஸ்புக், டிவிட்டர் சீனாவில் தடை செய்யப்பட்டு உள்ளன. கூகிள் சீனாவின் சட்டதிட்டங்களுக்கு வளைந்து கொடுத்து இது வரை செயல்பட்டு வந்தது. சீன அரசுக்கு எதிரான தேடல் முடிவுகளை வடிகட்டி வழங்கி வந்தது.

சீனாவின் இணைய தேடல் சந்தையில் கூகிள் 26  சீனாவை சேர்ந்த baidu.cnஇணையதளம் 60   மார்க்கெட்டையும் கொண்டுள்ளன. உலகின் அதிக இணைய பயனர்கள் சீனாவில்தான் உள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கை 360 பில்லியன். திருட்டு சாப்ட்வேர்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதும் சீனாவில்தான். மைக்ரோசாப்ட் மிக குறைந்த விலையில் அங்கே தனது இயங்குதளத்தை வெளியிட்டு மென்பொருள்களை விற்க முயற்சித்தாலும் பெரிய அளவில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

சீனாவில் இணைய தடை என்பது இரண்டு விதங்களில் இருக்கிறது. ஒன்று தகாத இணையதளங்களை மொத்தமாக சீன பயனர்கள் அணுக முடியாதபடி தடை செய்து விடுவது. உதாரணத்திற்கு Facebook, Twitter, IMDB, BBC இணையதளங்கள் சீனாவில் அணுக முடியாதபடி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

அடுத்தது தேடியந்திரங்களில் ஆட்சேபகரமான சில வார்த்தைகளை தேடும் போது தேடல் முடிவுகளில் சில தளங்களின் முடிவுகள் தோன்றாதபடி வடிகட்டி தணிக்கை செய்யும்படி தேடியந்திரங்களை கட்டாயபடுத்துவது. சீனாவில் இணைய தேடியந்திரங்களில் தடை செய்யப்பட்டுள்ள வார்த்தைகளுக்கான விக்கிபீடியா சுட்டி. தனது நாட்டை பற்றி செய்திகளை வெளியே கசிய விட விரும்பாத ரகசிய நாடாகவே சீனா திகழ்ந்து வருகிறது. தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் வார்த்தைகள் பற்றிய விபரம் இங்கே இருக்கிறது

இவ்வளவு காலம் இவற்றிற்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வந்த கூகிள் சீனாவுக்கான தனது இணையதளம் Google.cn ஐ மூடலாம் என்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை மூடிவிட்டு வெளியேற நேரலாம் என்றும் 'சீனாவுடன் புதிய அணுகுமுறை' என கூகிள் தனது வலைப்பதிவில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சீன மனித உரிமைக்காக போராடுபவர்கள் ஜிமெயில் விவரங்களை திருடும் விதமாக அமைந்த சைபர் தாக்குதலே இதற்கு காரணம் என்று கூகிள் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலின் மூலம் சீனா என்று கூகிள் தெரிவிக்கிறது.

கூகிள் மேலும் தெரிவித்து உள்ளதாவது. சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நோக்கத்தை அடையவில்லை. இரண்டு ஜிமெயில் கணக்குகள் மட்டும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அவற்றிலும் அந்த ஜிமெயில் கணக்குகளின் சப்ஜெக்ட் தலைப்பு மட்டும் களவு போனதே தவிர மெயில்களின் உள்ளடக்கம் பாதுகாக்கப்பட்டதாக கூறுகின்றனர். கூகிள் மீது மட்டுமன்றி இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு தகவல்கள் திருடப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூகிள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

இந்த சைபர் தாக்குதல், பயனர்களின் கருத்துரிமை ஆகியவற்றை காரணமாக சொல்லி இனி மேலும் இது போன்ற தேடல் முடிவுகளில் வடிகட்டல் வேலையை தொடரப் போவதில்லை என்று அறிவித்து உள்ளார்கள். இதனால் சீனாவில் இருந்து வெளியேற நேரிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூகிள் தெரிவிக்கிறது.

இணைய பயனர்கள் நல்ல ஆண்டிவைரஸ் நிறுவி கொள்ளும்படியும், இயங்குதளங்களின்  அப்டேட்சை தொடர்ந்து கணினியில் நிறுவி கணினி பாதுகாப்பை மேம்படுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கி உள்ளனர். ஈமெயில், சாட் பகிரப்படும் சுட்டிகளை கிளிக் செய்வதிலும், பாஸ்வர்ட், தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிருவதிலும் கவனம் கொள்ளும்படியும் அறிவுறுத்துகிறது

கூகுளின் இந்த முடிவுக்கு இது அமெரிக்கர்களின் வழமையான வியாபார தந்திரம் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து உள்ளார்கள். 2006 முதல் முழு மூச்சுடன் சைனாவில் அதிகம் செலுத்த முயன்று வரும் கூகுளால் அந்த நாட்டின் தேடியந்திரம்baidu.cn ஐ வீழ்த்த முடியவில்லை. அங்கே  லாபகரமாகவும் தொழில் நடத்த முடியவில்லை.  சீ... ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று கூகிள் வெளியேறும் முடிவை எடுத்து இருப்பதாக கூறுகின்றனர். உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீன சந்தையை விட்டு வெளியேறுவது கூகுளுக்குதான் பாதிப்பே அன்றி சீனாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது அவர்கள் கருத்து. 

சர்வதேச வர்த்தக முறைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என அமெரிக்க அரசு சீனாவிடம் விளக்கம் கேட்டு உள்ளது. இணைய பாதுகாப்புக்கு சீனர்கள் ஊறு விளைவிப்பவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக கூகுளின் இந்த முடிவு அமைந்துள்ளது. கூகுளை 'அமெரிக்க உளவாளி' என்று சொல்லி, கூகிள் வெளியேறுவது நல்லதுதான் என்று சீனர்கள் சிலரும் எழுதி வருகின்றனர்

Sunday, August 14, 2011

கூகிள் குரோம் OS



இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

கூகிள் குரோம் ஓஎஸ் பற்றி இந்த வீடியோ பாருங்கள்




இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.


இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1.
கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .
வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது. கூகிள் குரோம் பூட்டிங் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்


எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.


பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால்எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.


2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.


3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

கூகிள் குரோம் ஓஎஸ் செயல்பாடு குறித்த இந்த டெமோ வீடியோ பாருங்கள் . அறிமுக விழாவில் கூகிள் குரோம் ஓஎஸ் இயக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ


கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.



நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.

இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.
இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது. தொடர்ந்து கூகிள் குரோம் ஓஎஸ் பற்றி எழுதுகிறேன். உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.