இந்த தளமானது தமிழர்களுக்குகாக தமிழில் தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்க உருவாக்கபட்டது. இந்த தளத்தில் உள்ள தகவல் அனைத்தும் பல சிறந்த தளங்களில் சேகரிக்கபட்ட தகவல்கள் ஆகும்.
Thursday, August 11, 2011
F1 Key அழுத்தாதே! ஆபத்து!!
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு F1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து F1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கான பேட்ச் பைல் ஒன்றைத் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அநேகமாக இந்த செய்தியை எழுதும் நாளை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் பேட்ச் பைலில் இது கிடைக்கலாம். இந்த எச்சரிக்கையைப் படித்த பலர், நமக்கு எதுக்கு வம்பு, பிரவுசரையே மாற்றிவிடுவோம் என இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விடுத்து மற்றவற்றிற்கு மாறி வருகின்றனர்.
பென்டிரைவ் உதவியுடன் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்தை இயக்க !!!!
How to Boot Windows or Linux via a
"விண்டோஸ் மற்றும் லினக்ஸ்" இயங்குதளத்தை பென்டிரைவ் உதவியுடன் இயக்க இந்த கானொளியில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?
நாம் கோப்புகளை இது வரை பகிர்ந்து வந்தோம். இதற்கு நமக்கு இந்த இணையதளங்கள் உதவின.
4shared.com
rapidshare.com
megaupload.com
mediafire.com
(இது போன்று மேலும் பல உள்ளன).
ஆனால் TeamViewer
* Remote Support
* Presentation
* File transfer
* Vpn
* Presentation
* File transfer
* Vpn
இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.
மேலும் இதை

இதை நமக்கு தேவையான பயன்பாடுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.
www.teamviewer.com இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள் teamviewer Id மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.
Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் பண்ணினால் Id மற்றும் Password கிடைக்கும்.
(Id மற்றும் Password உதாரணத்திற்கு படத்தினை பார்க்கவும் )

உங்கள் Option-ய் தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்
Subscribe to:
Posts (Atom)


