மற்ற டிரைவ்களைக் காட்டிலும் சற்று கூடுதல் நீளத்தில், 77.5 மிமீ, இது அமைக்கப்பட்டுள்ளது. அகலம் 22 மிமீ மற்றும் தடிமன் 12.05 மிமீ. இதனுடைய எடை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் வெளிப்புற ஷெல் சிகப்பாக பாலிஷ் செய்யப்பட்டது போல் உள்ளது. இது இயக்கப்படுகையில் நீல நிறத்தில் உள்ளாக லைட் எரிகிறது.
பைல்களை நொடிக்கு 28.3 எம்பி வேகத்தில் படிக்கிறது. எழுதுகையில் நொடிக்கு 7.8 எம்பி வேகத்தில் செயல்படுகிறது. இந்த வேகம் சராசரியாக நாம் பிற பிளாஷ் டிரைவ்களில் பார்க்கும் வேகம் தான்.
ஐந்தாண்டு வாரண்டியுடன் கிடைக்கும் இந்த டிரைவ் குறியீட்டு விலை ரூ. 6,700.

No comments:
Post a Comment