இந்த தளமானது தமிழர்களுக்குகாக தமிழில் தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்க உருவாக்கபட்டது. இந்த தளத்தில் உள்ள தகவல் அனைத்தும் பல சிறந்த தளங்களில் சேகரிக்கபட்ட தகவல்கள் ஆகும்.
Friday, August 12, 2011
ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய Open Compute Project
ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று புதிய அறிவித்தல் ஒன்றினை தனது தலைமையகத்திலிருந்து நேற்று வெளியிட்டிருந்தது. வழமையான வெளியீடுகளை போல் அல்லாது இது ஒரு வித்தியாசமான திட்டமாக அமைந்திருந்தது. ”Open Compute Project” என்பதே இந்த புதிய திட்டத்தின் பெயர்.
Open Compute Project என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் Hardware கட்டமைப்புடன் தொடர்புடைய ஒரு திட்டம். ஃபேஸ்புக் நிறுவனம் தனது Data Center இன் தொழிநுட்பங்களை உலகளவில் பகிர்ந்து கொள்ளப்போகிறது.அதாவது Open Source ஆக்கியிருக்கிறது.
நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு ஆரம்பக்கட்டத்தில் உள்ள நிறுவனம் எவ்வாறு ஒரு Data center இனை தோற்றுவிக்கிறது. அதற்கு எவ்வாறான செலவுகள் ஏற்படுகிறது அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஃபேஸ்புக் எவ்வாறான முறையினை கையாண்டது என பல விளக்கங்கள் தரப்பட்டன.
மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் தனது வினைத்திறனான Data Center இன் மூலம் எவ்வளவு மின்சக்தியினை சேகரிக்கின்றது , எவ்வளவு பணத்தினை மீதப்படுத்திகிறது மேலும் எவ்வளவு வெப்பத்தினை குறைக்கிறது என்பது தொடர்பான தரவுகளினை ஃபேஸ்புக் வெளியிட்டிருந்தது.
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தொழிநுட்பத்தினை ஏனையோரும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த துறையில் இருக்கும் அனைத்து மட்டத்தினருக்கும் இந்த Open Compute Project மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Labels:
Internet
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment